வெள்ளத்தில் சிக்கிய 4 மாத குழந்தை பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய 4 மாத குழந்தையை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பத்திரமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படியே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதி கனமழையாக கொட்டியது. குறிப்பாக நேற்று காலை முதல் விடாமல் வெளுத்து வாங்கியது.

இரவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். நெல்லையின் மாநகரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் கழுத்தளவுக்கு தண்ணீர் நிற்பதால் மக்களை மீட்கும் பணியும் நடைபெற்றது.
விடாது பெய்த மழையால் பல ஊர்கள் தனித்தீவுகள் போல மாறியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து துண்டிக்கப்பட்டதால் ஊர்களை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்களும் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. மின் தடையும் ஏற்பட்டுள்ளதால் தொலைத்தொடர்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 4 மாத குழந்தையை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மீட்டுள்ளார். நெல்லையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகில் வெள்ளத்தில் தத்தளித்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பேரன் சிவகிருஷ்ணன் 4 மாத குழந்தையை நயினார் நாகேந்திரன் பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications