ஏசியை ஆஃப் பண்ணுங்க..ஹீட்டரை போடுங்க! 2 மாவட்டத்தில் சம்பவம் செய்யப்போகும் மழை! மெட் கொடுத்த அப்டேட்
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 1 மணி வரை தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 9 செமீ மழை பெய்துள்ளதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் இடையில் சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வடமாவட்டங்கள், கடலோரப் பகுதிகளில் மழை பெய்தால் விவசாய பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் அதிகரித்தது.
கோடை வெப்பத்திற்கு இணையாக வெயில் கொளுத்தி எடுத்ததால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழல் நிலவியது.இந்த நிலையில் மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இன்று மதியம் ஒரு மணி வரை தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ள நிலையில் அது குறித்தான அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறை பட்டு பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெங்கூர், நத்தம் ஆகிய பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதே போல கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூர் மற்றும் அரியலூர் முகாம் பகுதியில் நான்கு சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கோவை மாவட்டம் சின்கோனா, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

மேலும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி. விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி, விழுப்புரம் மாவட்டம் வளத்தி, சேலம் மாவட்டம் ஏத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம். கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக் கல்லார், கடலூர் ஏடபிஸ்யூஎஸ், நீலகிரி மாவட்டம் பந்தலூர். கள்ளக்குறிச்சி தியாகதுருவம். திருவண்ணாமலை கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தல இரண்டு சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
சேலம் மடுவு டேம், விழுப்புரம், கடலூர், நீலகிரி, திருவண்ணாமலை, தண்டராம்பேட்டை, ஊத்தங்கரை சிங்கம்புணரி, விருகாவூர், ரிஷிவந்தியம், நம்பியூர், எலந்த குட்டைமேடு, பவானி, முரார்பாளையம், இறையூர் மணிமுத்தாறு அணை ஆகிய பகுதிகளில் தல ஒரு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications