ஷாக்.. வசித்தது 25,000 பேர்.. இப்போ ஒருவர் கூட இல்லையே! சென்னையில் மொத்தமாக காலியான பெரும்பாக்கம்
சென்னை: சென்னை மழை வெள்ளம் காரணமாக பெரும்பாக்கத்தை மக்கள் திடீரென்று மொத்தமாக காலி செய்துள்ளனர். இங்கிருந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதால் அங்கு யாருமே இல்லாமல் அமைதியான இடமாக காட்சியளிக்கிறது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் கடந்த 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி முழுவதும் விடாமல் கனமழை பெய்து வந்தது.

இதனால் ஏறக்குறைய அனைத்து சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மழை நின்ற நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதன் பயனாக தற்போது சென்னையில் படிப்படியாக இயல்பு நிலை என்பது திரும்பி வருகிறது. இருப்பினும் சென்னை பெரும்பாக்கத்தில் தற்போதும் மழைநீர் தேங்கி உள்ளது. சென்னையில் அதிகப்படியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாக்கமும் ஒன்று. கடந்த 5ம் தேதி முதல் மழை இல்லாத நிலையிலும் தற்போதும் அங்கு மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் பெரும்பாக்கத்தில் வசித்து வந்த சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நேற்று மாலையில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் பெரும்பாக்கம் முற்றிலுமாக காலியாகி உள்ளது. இதனால் அங்கு அமைதியான நிலை ஏற்பட்டுள்ளது.
சதுப்பு நிலப்பகுதியாக அறியப்படும் பெரும்பாக்கத்தில் பெரிய பெரிய வீடுகள் உள்ளன. சதுப்பு நிலம் என்பதால் தேங்கிய மழைநீர் அப்படியே வடியாமல் உள்ளது. இதனால் வேறு வழியின்றி அனைத்து மக்களும் வெள்ளத்தால் வெளியேறி உள்ளனர். தற்போது அது பேய்நகரம் போல் அமைதியாக உள்ளது. மேலும் அங்குள்ள கடைகள், தொழில்நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் பெரும்பாக்கத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வெளியேற இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மக்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இந்த பகுதியில் இருந்து மட்டும் தற்போது 25,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு செல்ல பிராணிகளுடன் வீடுகளை காலி செய்துள்ளனர். மேலும் அங்கிருந்து தண்ணீர் வெளியேற போதிய கால்வாய் வசதி இல்லை என கூறப்படுகிறது. மக்கள் முழுவதுமாக வெளியேற இதுவும் முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் பெரும்பாக்கத்தில் வரும் காலத்தில் போதிய அளவுக்கு கால்வாய்கள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications