அடுத்த 3 மணி நேரம் கவனம்.. மழை 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது! பறந்த வானிலை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 மணி நேரம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகரிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம். சில இடங்களில் சாலைகள் வழுக்கும் நிலையில் இருக்கும். சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும் சூழல் உள்ளன.

முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 2 ஆம் தேதி தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதும் இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதும் இல்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications