கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. பிப்ரவரி 10 ஆம் தேதி கொட்டப்போகுது மழை! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 10 மற்றும் பிப்ரவரி 11 ஆகிய நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அப்படியென்றால் இன்று முதல் 9 ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்? வாருங்கள்.. வானிலை அறிக்கையை விரிவாக பார்ப்போம்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "பிப்ரவரி 5 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

பிப்ரவரி 10 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 11 ஆகிய தேதிகள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன் அறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 31 - 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதும் இல்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதும் இல்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் தற்போது கோடை காலத்தை நினைவூட்டும் அளவுக்கு மழை பொய்த்து வெப்பம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இரவு நேரங்களில் மட்டும் பனிப்பொழிவின் காரணமாக வெப்பம் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆனால், பனியும் குறைந்துவிட்டால் மக்கள் பாடு திண்டாட்டம்தான்.












Click it and Unblock the Notifications