Where is Ditwah?: நாகையிலிருந்து எத்தனை கி.மீ. தூரத்தில் இருக்கிறது டிட்வா புயல்? டெல்டா வெதர்மேன்
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எத்தனை கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் இருக்கிறது என்பது குறித்து டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறிப்பிட்ட பகுதி மக்கள் இன்று தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கூறியிருப்பதாவது: 40 மணி நேர இலங்கை நிலப்பரப்பு ஊடுருவலை கடந்து டெல்டா கடற்கரை நோக்கி நகரும் டிட்வா புயல். இன்று (29.11.2025) காலை 8:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென் கிழக்கே 170 கிமீ, காரைக்கால் 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் அதித கனமழையாக 250 மிமீ மழை பதிவு, வேதாரண்யத்தில் 185 மிமீ மழை பதிவு, வேளாங்கண்ணி 133 மிமீ மழையும், திருப்பூண்டியில் 123 மிமீ மழையும் பதிவு, நாகப்பட்டினம் 116 மிமீ என நாகை மாவட்டத்தில் சராசரியாக 140 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இப்புயல் தொடர்ந்து வடக்கு திசையில் பயணித்து அடுத்த ஓரிரு மணி நேரங்களில் டெல்டா கடற்கரை அடைந்து வலுபெற வாய்ப்பு. இன்று மாலை / இரவு டெல்டாவில் புயலின் முன்பகுதி நிலப்பகுதியில் ஊடுருவலை ஏற்படுத்தும் என எதிர்பபார்க்கப்படுகிறது.
தற்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் கனமழை துவங்கியுள்ளது. வரும் மணி நேரங்களில் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
புயலின் மேற்கு டெல்டாவில் கரையேறும் போது இன்று நவம்பர் 29ல் மாலை/இரவு அதிகனமழை பெய்யும். காவிரி டெல்டா மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காவிரி டெல்டாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று நள்ளிரவு முதல் புயல் மீண்டும் வடக்கு திசையில் பயணிக்க துவங்கும் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை துவங்கி இன்று (29.11.2025) இரவு முதல் (01.12.2025) காலைக்குள் பரவலாக கன முதல் மிக கனமழையும், அதித கனமழையும் ஏற்படுத்தும்.
இன்று புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை தொடரும். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர் உள்பட உள் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை எதிர்ப்பார்க்கலாம்.
மீண்டும் கூறுகிறேன் காவிரி படுகை மாவட்ட மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications