பெஞ்சல் புயல்.. இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்னும் கடலில்தான் உள்ளது.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: பெஞ்சல் புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், பெஞ்சல் சூறாவளி இன்னும் கடலில்தான் உள்ளது. கரையைக் கடக்கவில்லை. செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கவும். மேலும் இன்று மதியம் - மாலை வரை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று பலத்த மழை அவ்வப்போது பெய்யும். விட்டு விட்டு மழை பெய்யும்.
வரலாற்று சிறப்புமிக்க மழை
-------------
காலை 7.15 மணி வரை விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மைலம் AWS 504 மிமீ AWS 490 பதிவாகி உள்ளது. சற்று நேரத்தில் புதுச்சேரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க 500 மிமீ மழை அளவைக் கடக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின்னர் தற்போது புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளது 2004ஆம் ஆண்டு புதுவையில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதற்கு பின் பதிவான மிக அதிக கனமழை இதுதான்.
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலையில் 18 செ.மீ., செய்யாறில் 16.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொளப்பாக்கம் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
முக்கியமான 3 மணி நேரம்: பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கரையைக் கடந்த புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, பாதுகாப்பு தடுப்புகள் சரிந்து விழுந்துள்ளன.
இரவு முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் புதுச்சேரி தத்தளிக்க தொடங்கி உள்ளது. புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் காஞ்சி, தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications