சென்னையில் சோகம்.. விழுந்த மரம்.. பாய்ந்த மின்சாரம்.. மழைக்கு 8 பேர் பலி.. 17 சுரங்கப்பாதை மூடல்
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக சென்னையில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக மாறியது. சென்னை அருகே புயல் நிலை கொண்டிருந்தது. இதனால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று வரை சென்னையில் மழை கொட்டித்தீர்த்தது.

2015ம் ஆண்டை விட தற்போது அதிக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. சென்னைக்கு வடக்கே 190 கிலோமீட்டர் தொலைவு புயல் விலகி சென்றுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இந்த புயல் ஆந்திர மாநிலத்தில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. இதற்கிடையே தான் இன்று காலை முதல் சென்னையில் மழை இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளமாக தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் சென்னையில் மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு குறித்த காவல்துறை முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 17 சுரங்ப்பாதைகள் சென்னையில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி கணேசபுரம் சுரங்கப்பாதை கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, சிபி சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, ஆர்பிஐ, சுரங்கப்பாதை, கோயம்பேடு. புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை உள்ளிட்டவை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.
மேலும் மின்சாரம் தாக்கியது, மரம் விழுந்தது உள்பட மழை பாதிப்பால் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 50 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றபட்டுள்ளது என சென்னை காவல்துறை கூறியுள்ளது.
மேலும் மின்சாரம் தாக்கியது, மரம் விழுந்தது உள்பட மழை பாதிப்பால் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 50 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றபட்டுள்ளது என சென்னை காவல்துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications