Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்யார் புயல் வருகிறது.. வங்கக் கடலில், தென்குமரி கடலில் நடக்கும் மாற்றம்.. இன்று நல்ல மழை இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளது.. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் சமீப நாட்களாகவே கொட்டி வருகிறது.. இந்நிலையில், தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

Cyclone Senyar South Kumari Sea Region

கன்னியாகுமரி - மீண்டும் புயல் சின்னம்

முக்கியமாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (இன்று), தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும்.

இந்திய பெருங்கடல்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது 25-ம் தேதி வாக்கில், குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நவம்பர் 24 இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

இன்று கனமழை

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.25 முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 24ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கம் - சென்யார்

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில், தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, படிப்படியாக வலுவடைந்து, வரும் 26ல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அரபு மொழியில், 'சென்யார்' என்றால் சிங்கம் என்று பொருளாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+