மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!
சென்னை: கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக, தமிழகத்தில் பரவலாக வானிலை மாற்றம் இருந்தது. ஆனால், கோடைக்காலம் முடிவடைந்திருப்பதாகவும், இனி வறண்ட வானிலைதான் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே டெல்டா மாவட்டங்கள் தொடங்கி, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள் வரை பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,

25-03-2026 முதல் 27-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
28-03-2026 முதல் 31-03-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 25-03-2026 மற்றும் 26-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
மற்றும் காரைக்கால் பகுதிகளில் 27-03-2026 முதல் 29-03-2026 வரை: தமிழகம், புதுவை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
25-03-2026 மற்றும் 26-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
27-03-2026 முதல் 29-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4" செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை
இன்று (25-03-2026) மற்றும் நாளை (26-03-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் 25-03-2026 முதல் 29-03-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications