மிக்ஜம் புயல்.. சென்னைக்கு ஆரம்பமே இப்படியா.. முதல் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜம் புயல் உருவாக உள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் மழை பெய்து வருகிறது- இன்று சென்னையில் குறுகிய நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், சில நேரங்களில் மிக தீவிரமாக பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தாழ்வுமண்டலம் தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு சுமார் 860 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 910 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

First spell of rains from the outer band will start shortly in the Chennai city: Tamil Nadu Weatherman

இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( சனிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் ஞாயிற்றுக்கிழமை புயலாக அது வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் புயல் உருவானால் அந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் வரும் 5-ந்தேதி காலையில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே சுமார் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயலாக கரையை கடக்கக் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..

தமிழகம் முழுவதுமே கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், புதிதாக உருவாகி உள்ள மிக்ஜம் புயலின் கண் எங்கு கரையை கடக்கும் என்பது இன்னமும் கணிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலையில் இருந்தே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சிறிய அளவில் சாரல் மழையும் பெய்து வருகிறது. சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், புயலின் தாக்கம் காரணமாக முதற்கட்டமான மழை சென்னையில் விரைவில் விழப்போகிறது. சென்னையில் குறுகிய நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், சில நேரங்களில் மிக தீவிரமாக பெய்யும் என்று கூறியுள்ளார். இன்னொரு பதிவில் இந்த நவம்பரில் நல்ல மழை பெய்துள்ள டெல்டா மாவட்டங்களில், இந்த புயலால் கனமழையை இழக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+