பங்குனி வெயிலுக்கு.. 10 மாவட்டங்களில் பிரேக்! கனமழைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பங்குனி வெயில் கொஞ்சம் ஓவராகவே பதிவாகி வந்தது. இந்நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை
வத்திராயிருப்பு (விருதுநகர்) 7 செ.மீ, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி) தலா 4 செ.மீ, பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), இரணியல் (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பெரியகுளம் (தேனி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ, அணைகெடங்கு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), தக்கலை (கன்னியாகுமரி), ஆழியார் (கோயம்புத்தூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 1 செ.மீ.
வெப்பநிலை நிலவரம்
ஈரோட்டில் அதிகபட்சமாக 37.2° செல்சியஸ் என வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.0° செல்சியஸ் என பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 1-3° செல்சியஸ் குறைவாக இருந்தது. ஏனைய தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-37° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1. நீலகிரி
2. கோயம்புத்தூர்
3. திருப்பூர்
4. ஈரோடு
5. தேனி
6. திண்டுக்கல்
7. மதுரை
8. விருதுநகர்
9. சிவகங்கை
10. தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
03-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
04-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
05-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-04-2025 முதல் 08-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று முதல் ஏப்.5 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் படிப்படியாக 23 செல்சியஸ் குறையக்கூடும். உள் தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். 06-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில் இன்று தொடங்கி ஏப்.5 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி-இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (02-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (03-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள்
இன்று வெயில் சற்று குறைந்திருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தீவிரம் அதிகமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கின்றனர். அதாவது தளர்வான ஆடைகளை அணிதல், வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்துதல், அடர் நிற ஆடைகளை தவிர்த்தல், அடிக்கடி தண்ணீர் குடித்தல், நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுதல், தண்ணீருடன் மோர், இளநீரை எடுத்துக்கொள்ளுதல், நீர் சத்து அதிகம் கொண்ட வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழங்களை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிரச்சனைகள் என்னென்ன?
மட்டுமல்லாது உச்சி வெயில் நேரங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், உடல் நிலை சரியில்லாத நேரத்தில் வெயிலில் அலைய கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மயக்கம் வருவதை போல உணர்ந்தாலோ, உடல் சோர்வாகவோ, அல்லது திடீர் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளும்போது உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. கூடுமானவரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்வதும் கூட உடலை பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் சொல்வது இதுதான்
வெயில் காலங்களில் பொதுவாக ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. உடலில் நீர் சத்தும் உப்பு சத்தும் குறையும்போது இது ஏற்படுகிறது. தவிர வெப்பக்காய்ச்சல் (Heat Exhaustion) ஏற்படவும் வாய்ப்பு அதிகம். தசைப்பிடிப்பு, வயிற்று வலி, அதிகமாக சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் வெப்ப காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதேபோல உணவு விஷயத்தில் மிக கவனம் அவசியம். உணவு வெயில் காலங்களில் சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். இதை எடுத்துக்கொள்ளும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications