பொல பொலன்னு பொளக்க போகுது மழை.. தமிழகத்திற்கு செம்ம மழை இருக்கு.. குளிரும் டெல்டாவாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகமெங்கும் தீவிரமாகி வருகிறது.. இதனால், பலத்த மழை பெய்து வருகிறது.. இதனிடையே, கடந்த நவம்பர் 14ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிதிலி என்றும் பெயரிடப்பட்டது.

Heavy Rain today in Tamil Nadu and chances to rain till 22nd in the 12 districts: Weather Report

மிதிலி புயல்: இந்த மிதிலி புயல் நேற்று காலையில் ஒடிசாவின் பாரதீப்பிற்கு கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தென்கிழக்கே 200 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கிமீ தொலைவிலும் இருந்து வங்கதேசம் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது.

பிறகு, நேற்றிரவு இந்த புயல் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 20 கி.மீ வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்திருக்கிறது..

கரையை கடந்தது: கரையைக் கடந்த நிலையில், இந்த புயலானது, வடக்கு வழகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் திரிபுரா மற்றும் பங்களாதேஷ் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்குச் சென்று வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வங்க கடலின் தென்மேற்கு மற்றும் இலங்கை பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. பெரும்பாலான மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்; மேலும், வங்க கடலின் வடக்கு பகுதியில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால், மீனவர்கள் இன்று வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

அதேபோல, தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கும் என்று வானிலை மையம் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர் , தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி தகவல்: வரும் 21, 22 ஆகிய தேதி வரை தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கணித்திருந்த நிலையில், இன்று முதல் பலத்த மழை கொட்ட போவதாக கூறியுள்ளது, கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

மழை: நாளையும் மழை இருக்க போவதாக அறிவிப்பு வந்துள்ளது.. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாளும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+