ஒரே நாளில் 20 செ.மீ வரை பெய்ய வாய்ப்பு.. மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலை.. துணை முதல்வர் உதயநிதி
சென்னை: தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். மேலும் மூடப்படாத மழை நீர் வடிகால்களை சுற்றி வேலி அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மெற்கொண்டார். பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு சார்பாக தமிழநாடு அலர்ட் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோடு செய்து பொதுமக்கள் மழை பற்றிய தகவல்களை உடனுக்கு உடன் அறிந்து கொள்ளலாம். பல்வேறு வானிலை பாதிப்புகளை பயன்படுத்தி வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை கண்காணித்து வருகிறோம். ஓரிரு இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முடிவு பெறாமல் இருந்து இருந்தால் அவற்றை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டுள்ளோம்.
ஏதேனும் மழை நீர் வடிகால் மூடப்படாமல் இருந்தால் அவற்றை மாநகராட்சிக்கு ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் தெரியப்படுத்தலாம். அதன் மீது உடனடி நட்வடிக்கை எடுக்கப்படும். மின்சார வாரியத்திற்கு உரிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்பு அடையாதவாறு அனைத்து பணிகளையும் பொதுமக்கள் மேற்கோண்டு வருகிறார்கள்.
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது. பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம். 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் மழை காலத்தில் அரசு தரும் எச்சரிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடிப்படையில் அடுத்து வரும் சில நாட்களில் தமிழ்நாட்டில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications