ஹெலிகாப்டர் கிளம்பிருச்சு.. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 500 பயணிகள்! விரைவில் மீட்பு
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட 500 ரயில் பயணிகளை மீட்க ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்களே அடித்து செல்லப்பட்டு உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. தூத்துக்குடியின் தட்டப்பாறை - மேலவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே 7 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப்பாலங்களில் வெள்ளநீர் வழிந்தோடியபடி சென்று கொண்டு உள்ளது.

அதேபோல் நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களுக்கு இடையே 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தில் இருந்த சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியே தனித்தீவாக காட்சி தருகிறது. ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் தண்டவாள பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஆனால், அதற்கு முன்பாகவே கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் அன்று இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. சுமார் 800 பயணிகள் இந்த ரயிலில் இருந்தனர். அவர்கள் வெள்ளம் காரணமாக நடுவழியிலேயே மாட்டிக்கொண்டனர். இவர்களில் 300 பேர் மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் நேற்று அதிகாலை 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோது வெள்ளம் அதிகரித்து சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் பகுதியே தனித்தீவாக காட்சியளித்ததை அடுத்து தூத்துக்குடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களாலும் சாலை மார்க்கமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை அடைய இயலவில்லை. ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே அவர்களை மீட்க முடியும் என்ற அசாதாரண சூழல் நிலவியது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி காலை தொடங்கி இருக்கிறது. இதற்காக மதுரையில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது. அதன் மூலம் பயணிகள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications