கரூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய எச்சரிக்கை.. “மதிய நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம்..”
கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில், கிழக்கு இந்தியா முழுவதும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, தற்போது தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் பல இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வெப்ப அலை தொடர்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், வெயிலின் தாக்கத்தால் உடல் நலக் குறைவி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications