மதுரையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உடைந்து உருவான செயற்கை அருவி.. குவிந்த வாகன ஓட்டிகள்
மதுரை: மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது.. தொடர் கனமழைக்கு நடுவில் ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உடைந்து அருவி போல் தண்ணீர் சாலையில் ஊற்றியது.
தமிழகத்தில் கடந்த மே 7ம்தேதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை, படிப்படியாக கடந்த வாரத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் வெகுவாக உள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது.

மதுரையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று பகலில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளின் சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மதுரை மாநகரில் மிகப்பெரிய அளவில் மழை பெய்தது. அதிபட்சமாக தல்லாகுளத்தில் 108 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இதற்கு அடுத்தபடியாக மதுரை விமானநிலையம் பகுதியில் 23 மி.மீ., விரகனூர் பகுதியில் 42.60 மி.மீ., சிட்டம்பட்டி பகுதியில் 36.40 மி.மீ., கள்ளந்திரி பகுதியில் 26.20 மி.மீ., இடையபட்டி பகுதியில் 36 மி.மீ. மழை பெய்திருந்தது. மதுரையை அடுத்த திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 50.20 மி.மீ., தனியாமங்கலம் பகுதியில் 23 மி.மீ., மேலூரில் 8 மி.மீ., பேரையூரில்-9.80 மி.மீ., எழுமலையில் 13.40 மி.மீ., கள்ளிக்குடியில் 42.60 மி.மீ மழை பெய்திருந்தது.
மதுரை மாநகரம் முழுவதுமே பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பெரியார் பஸ்நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளின் பிரதான சாலைகளில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மதுரை மாநகரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உடைந்து அருவி போல் தண்ணீர் சாலையில் ஊற்றியது. ஆரப்பாளையத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர் தேக்க தொட்டியின் அடியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அருவி போல் சாலைகளில் செல்லும் வாகனங்களின் மீது விழுந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் உற்சாகத்துடன் குளித்தபடியும், வாகனங்களை கழுவியபடியும் சென்றனர். இந்த உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உடைந்து அருவி போல் தண்ணீர் கொட்டிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications