சென்னைக்கு அருகே "கண்" வரும் அந்த நொடி! இந்த 24 மணி நேரம்தான் ரொம்ப முக்கியம்.. மிரட்டும் மிக்ஜாம்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த புயல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட உள்ள 24 மணி நேரம் கவனம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாளர், தஞ்சாவூர், புதுச் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 மணி நேரம்: இந்த புயல் என்னதான் 5ம் தேதி கரையை கடக்கலாம். 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் அதற்கு முன்பே.. இன்று.. அதாவது 3ம் தேதி பிற்பகல் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 3ம் தேதி பிற்பகல் மூலம் 4ம் தேதி பிற்பகல் வரை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 24 மணி நேரம்தான் சென்னைக்கு ரொம்ப முக்கியம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் புயலின் கண் சென்னைக்கும் மிக அருகே வரும். அல்லது தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு அருகே புயலின் கண் வரும் .
இந்த புயல் என்னதான் ஒருவேளை தெற்கு ஆந்திர பிரதேசம் அருகே கரையை கடந்தாலும்.,. சென்னைக்கு அருகே கண் இந்த 24 மணி நேரத்தில் வரும். . 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றாலும்.. இந்த நேரத்தில்தான் புயல் காரணமாக சென்னைக்கும், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுக்கும்.
அதிக மழை மேகங்கள் இந்த நேரத்தில்தான் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு அருகே வரும். அதனால் அதிகமான மழை இந்த காலகட்டத்தில் பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
இன்று புயலாக மாறும்: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று மிக்ஜாம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முழுமையாக நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 33 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது என்று வானிலை ஆய்வும மையம் தேபிவித்துள்ளது. மிக்ஜாம் இன்று புயலாக உருவெடுக்கும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.












Click it and Unblock the Notifications