தீவிரம் அடைந்துவிட்டது! சென்னைக்கு அருகே நிற்கிறது! நீளமாக இருக்க போகுது! வெதர்மேன் பெரிய எச்சரிக்கை
சென்னை: சென்னையில் பெய்யும் தீவிர மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், சென்னைக்கு வெளியே கடலில் இருந்த வலிமையான மேகங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. இவை மேலும் வலிமை அடைந்து.. சிட்டியை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இதன் மூலம் அடுத்த ரவுண்டு கனமழை சென்னை முழுக்க பெய்ய போகிறது. கடந்த 6 மணி நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் 150 மிமீ மழை பெய்துள்ளது. முக்கியமாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. முக்கியமாக நள்ளிரவில் இருந்து பல ஸ்டேஷன்களில் 200 மிமீ மழை வரை பெய்துள்ளது. .
வரப்போகும் மழை மிக நீண்ட, தீவிரமான மழையாக இருக்க போகிறது. இந்த மழை 250 மிமீ மழையாக இருக்க போகிறது. முக்கியமாக இரவு நேரத்தில் மழை தீவிரம் அடையும். இரவு நேரம் நெருங்குவதால் மேகங்கள் இன்னும் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன.
போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங் கட்டாயம்!!!
அப்பார்ட்மென்டில் தண்ணிக்கு மோட்டார் போட்டு வெச்சுக்கோங்க !!!
மிக முக்கிய தேவை இல்லை என்றால்.. எதற்காகவும் வெளியே வர வேண்டாம் !!!, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
மழை அதிகம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 84% அதிகம் பெய்துள்ளது. சென்னையில் 81% அதிகம் மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ள நிலையில், 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், சென்னையை நோக்கி மேக கூட்டங்கள் நகர தொடங்கி உள்ளன.
சென்னை நரசிங்க புரம் வழியாக இந்த தாழ்வு மையம் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தாழ்வு மையம் சென்னைக்கு அருகே நாளை மாலை நேரத்தில் வரலாம். நாளை மாலை நேரத்தில் சென்னைக்கு அருகே நின்று மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தாழ்வு மையம் எங்கே உள்ளது என்று இங்கே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் இந்த தாழ்வு மையம் உள்ளது. இந்த தாழ்வு மையம் காரணமாக மேகங்கள் பேண்ட் பேண்ட்டாக வர தொடங்கி உள்ளது. மொத்தமாக மேகம் வராமல்.. கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து 360 கிமீ தூரத்திற்கு அதிகமான தூரத்தில் இந்த தாழ்வு மையம் உள்ளது.
வானிலை வல்லுனர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் தாழ்வு மண்டலம் வலிமை அடைவதே மழை வேகம் எடுக்காமல் போனதற்கு காரணம். சென்னைக்கு அருகே இந்த தாழ்வு மையம் நின்று விளையாடும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications