Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெஞ்சல் வெள்ளத்தில் போன மாடுகளுக்கு.. போஸ்ட்மார்ட்டம் பண்ணாதான் நிவாரணமாம்.. கலங்கிய விவசாயிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மீண்டெழ நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதற்காக தமிழக அரசு விதித்துள்ள சில விதிகள்தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 இலட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

weather tamilnadu weatherman summer weather news

சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10 ஆயிரம், முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ. 17 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்லாண்டுப் பயிர்கள், மரங்களுக்கு ரூ. 22,500. எருது, பசு உயிரிழப்புக்கு - ரூ.37,500: வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு - ரூ. 4,000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் இழந்தோருக்குச் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். மாணவர்களுக்குப் புதிய பாடப்புத்தகங்கள் & நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் இரு நாட்களுக்கு மேல் மழைவெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாடுகளுக்கு சிக்கல்: ஆனால் இறந்து போன ஆடு மாடுகளுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்தால் மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என்று உள்ளூர் விஏஓ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாடுகள் வேறு நோயால் மரணம் அடைந்ததை காட்டி பணம் வாங்க கூடாது.. இல்லாத மாட்டை இறந்து போனதாக சொல்லி பணம் வாங்க கூடாது.. என்பதை எல்லாம் தடுக்க மாடுகளுக்கு, ஆடுகளுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பல மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் அந்த மாடுகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியும். காணாமல் போன மாடுகளை எப்படி கடலில் சென்று கண்டிபிடிக்க முடியும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

முதல்வர் கவலை: ஏற்கனவே பெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் முதல்வர் ஸ்டாலினை மிகவும் கவலையடைய வைத்திருக்கிறதாம். குறிப்பாக, வட தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் துயரங்களையும் அறிந்து ரொம்பவே கவலைப்பட்டுள்ளார்.

தனது கவலையை உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள்; அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!, என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று போஸ்டும் செய்திருந்தார்.

போனில் பேசிய அமைச்சர்: நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை தொடர்புகொண்டு திருவண்ணாமலை மாவட்ட நிலவரங்களை கேட்ட ஸ்டாலின், பாறை உருண்டதில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் பலியான துயரத்தை எ.வ.வேலு சொன்னதைக் கேட்டு விக்கித்துப்போயிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் மாடுகளுக்கு போஸ்ட் மார்ட்டம் கட்டாயம் என்ற விவகாரம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+