இன்று மதியம் 1 மணி வரை.. சென்னை டூ குமரி வரை 19 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறபப்ட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 24 செமீ மழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 24 செமீ மழை பெய்துள்ளது. இதேபோல் கோவை சின்னக்கல்லாரில் 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது. நெல்லையின், நாலுமுக்கு, ஊத்து பகுதியில் தலா 7 செமீ மழை பெய்தது.

குமரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
19 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
"தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:- "மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோவை, நீலகிரியில் கனமழைக்கு சான்ஸ்
குறிப்பாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 28-07-2025 மற்றும் 29-07-2025, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
30-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 31-07-2025 மற்றும் 01-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னையில் இன்று (27-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications