அப்பாடா.. வெயில் வந்துருச்சுப்பா! சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு முகத்தைக் காட்டிய சூரியன்!
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை புரட்டி எடுத்த நிலையில், இன்று சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத அளவில் பெய்த மழையால், நகரமே மழைநீரில் மிதந்தது. மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தரைத் தளங்களில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால், தண்ணீர் வடிய வழியின்றி, வெள்ள நீர் மட்டம் உயர்ந்துகொண்டே சென்றது.

தற்போது மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. சென்னைக்கு வடக்கே 200 கிலோமீட்டர் தொலைவுக்கு புயல் விலகி சென்றுள்ளது. இதனால் சென்னையில் இன்று காலையில் இருந்து மழை இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பெய்த கனமழையால் சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளமாகத் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் மொத்தமாக 47 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் காட்டுப்பாக்கத்தில்தான் மிக அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, சென்னை மீனம்பாக்கத்தில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 20.4 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலையிலேயே சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக பகலில் துளி வெயிலையும் பார்க்க முடியாத அளவுக்கு மலை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று வெயில் வெளிச்சம் பட்டுள்ளது சென்னை மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. பல பகுதிகளில் மழைநீர் வடிந்துவிட்டது. மிகவும் தாழ்வான சில பகுதிகளில், இன்று, மழைநீர் வடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications