செங்கல்பட்டில் "சோலோ ஷோ".. காஞ்சிபுரத்தில் இன்றிரவு சூழும் மழை.. மேகம் வரிசையா நிக்குதாமே: வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக போவதாக வானிலை மையம் அறிவித்த உடனேயே, சென்னையில் மழை கொட்ட துவங்கி விட்டது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய மெசேஜ் ஒன்றை தந்துள்ளார்.

இன்றைய தினம், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், "வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

Tamil Nadu Weatherman Pradeep John says, Chance to Heavy rain Chengalpattu, Kancheepuram today

பலத்த மழை: தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஏழு நாள்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய தினம் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் 22ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய தொடங்கிவிட்டது.

புறநகர் பகுதிகள்: சென்னையிலும் இன்று பிற்பகலுக்கு மேல் மழை கொட்டியது.. மாலை முதல் இரவு 7 மணியை கடந்தும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது..

புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளிலும், சென்னையில் தி.நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், கோபாலபுரம், தேனாம்பேட்டை, எழும்பூர், கிண்டி, சேப்பாக்கம், மெரினா ஆகிய இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது.

Tamil Nadu Weatherman Pradeep John says, Chance to Heavy rain Chengalpattu, Kancheepuram today

மாலை முதல் இரவு 7 மணியை கடந்தும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.. சேலையூர்: குறிப்பாக, புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளிலும், தி.நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், கோபாலபுரம், தேனாம்பேட்டை, எழும்பூர், கிண்டி, சேப்பாக்கம், மெரினா ஆகிய இடங்களிலும் மழை பொழிகிறது.
வெதர்மேன்: இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், எங்கெங்கு மழை இருக்கும் என்பதை விரிவாக சொல்லி உள்ளார். அந்த பதிவில், "தெற்கு மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளில் இரவு நீண்ட மழை பெய்யும். சென்னையில் தினசரி பெய்யும் மழை தொடர்கிறது. நேற்று வடசென்னையில் மழை பெய்த நிலையில், இப்போது, தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

சோலோ ஷோ: மேகங்கள் வரிசையாக நிற்கிறது,.. இவை மத்திய மற்றும் தென் சென்னைக்கு நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. புதிய காற்றால் சென்னை முழுவதும் மழை பெய்யலாம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் "சோலோ ஷோ" என்றும் வெதர்மேன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+