இந்த 12 மாவட்டங்களில் மழை அடித்து வெளுக்க போகிறது.. வெயிலுக்கு குட் பை.. வானிலை மையம் ஸ்வீட் தகவல்
சென்னை: கட்டுமான பணி, சாலை போடும் பணிகள் உள்ளிட்ட வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் கடுமையான பணிகளின் பணி நேரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் கட்டுமானப் பணியின் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி பலியாகி உள்ளார். உ.பியை சேர்ந்த சச்சின் மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சென்னை மீஞ்சூர் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

இவர் கட்டுமான பணியில் ஈடுபடும் போதே மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்தவர்கள் அலறியபடி அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நீண்ட நேரம் வேலை பார்த்த நிலையில் மயங்கி விழுந்து பின்னர், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?: ஹீட் ஸ்ட்ரோக் என்பது கடுமையான வேலை காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இதயம் தொடங்கி பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான சூடு ஆகியவற்றுள் நீண்டகாலம் இருந்தால் உடலின் வெப்பநிலை ஒழுங்குமுறை அமைப்பு செயல் இழப்பதை குறிக்கும்.
இதன் மூலம் கடுமையான வெப்ப பக்கவாதம் மூளை, இதயம், சிறுநீரகங்கள் மற்றும் தசைகள் போன்ற முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தும், இது கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வெப்ப அழுத்தத்திற்கு உடலின் பிரதிபலிப்பு அதிகரித்த இதயத் துடிப்பை உள்ளடக்கியது, இது இருதய அமைப்பைக் கஷ்டப்படுத்தும், குறிப்பாக முன்பே இருக்கும் இதய நோய்களை கொண்ட நபர்களில் ஏற்படும்.
வெப்பநிலை மோசம்: தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு மோசமான வானிலை நிலவி வருகிறது.
பெரும்பாலான இடங்களில் தமிழ்நாட்டில் 38-39 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது. மற்ற சில இடங்களில் நிலையங்களில் 42°C மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை நிலவுகிறது. உதாரணமாக வேலூர் :43.2°C (+4.0°C) & திருச்சி: 42.1°C (+3.7°C),. திருப்பத்தூர், திருத்தணி, தருமபுரி, மதுரை நகரம் & விமான நிலையம், பாளையங்கோட்டை, சேலம், நாகப்பட்டினம், சென்னை (எம்பிகே) மற்றும் தஞ்சாவூரில் 40-42 டிகிரி செல்சியஸ் நேற்று பதிவானது.
வேலை நேரம் மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் வேலை நேரத்தை மாற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கட்டுமான பணி, சாலை போடும் பணிகள் உள்ளிட்ட வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் கடுமையான பணிகளின் பணி நேரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அரசு சார்பாக இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பகலில் வெயிலில் மேற்கொள்ளப்படும் கடுமையான வேலைகளுக்கு இரவில் மாற்று நேரம் கொடுக்கலாம் என்று ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றதாம் . நீங்களும் சென்னையில் வீடு கட்டும் பட்சத்தில் இரவு நேரத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் . இல்லையென்றால் பகலில் மேற்கொள்ளப்படும் பணிகள் மரணத்திற்கு காரணமாகலாம். கட்டுமான பணிகள் காரணமாக உங்கள் மீதும் வழக்கு பாயும் நிலை ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications