இந்தா ஆரம்பிச்சிடுச்சுல்ல.. சென்னையில் இடி, மின்னலுடன் மழை.. அடுத்த சில மணி நேரத்திற்கு அலர்ட்!
சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தற்போது சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது.
இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோல இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் தினமும் மாலை நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இது குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "அடுத்த 3 மணி நேரம் (இரவு 9.30 மணிக்குள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன. சாலைகள் வழுவழு என்று இருக்கும். சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம். பழைய, பழுதடைந்த கட்டிடங்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன" என்று கூறியிருந்தது.
சென்னையை பொறுத்த அளவில், புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ஸ்ரீபெரும்புதூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல தற்போது அண்ணா நகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், கொரட்டூர், ரெட்டேரி, மூலக்கடை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications