வேலைய காட்ட துவங்கியது வானம்.. தமிழ்நாட்டில் வெளுக்க போகுது மழை.. அடேங்கப்பா இத்தனை நாளைக்கு மழையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அடுத்த அறிவிப்பினை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து, கடந்த மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.. பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிவு இருந்தபோதிலும்கூட, கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்தது.
எனினும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டியது.. நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதேபோல தென்மாவட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

Weather report and low pressure in Bay of Bengal and Heavy Rain in Tamil Nadu

வானிலை மையம்: இதனிடையே, ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிப்பு வெளியிட்டிருந்தது.

அந்த அறிவிப்பிபில், ஜூலை 20-ம் தேதி காலை வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஜூலை 21ம் தேதி, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை: இதேபோல, வரும் 22, 23 மற்றும் 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்புனை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

வங்கக்கடல்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 22) முதல் வரும் 27-ம் தேதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24, 25-ம்தேதிகளில் சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+