‛‛4 நாள் வெப்ப அலை வீசும்’’.. சென்னை நிலவரம் என்ன? இன்று முதல் மக்களே உஷார்.. வானிலை ‛அலர்ட்’
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை வீசப்போகும் வெப்பஅலை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு மதியம் சொல்ல வேண்டிய தேவையை இல்லை.

வழக்கம்போல் கோடை வெயில் கோபத்தை கொப்பளிக்கும் வகையில் வெளுத்து வாங்குகிறது. அதோடு வழக்கத்துக்கு மாறாக தற்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது.
இதனால் வீடுகளில் ஏசி, பேன் இன்றி இருக்க முடியவில்லை. மேலும் கடும் வெயில் மற்றும் வெப்பஅலையில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனால் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நாட்களில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது வடதமிழக உள்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications