அக்.22 டூ 25 வரை வங்கக் கடலில் உருவாகும் புயல்! தமிழகத்திற்கு பாதிப்பா? வெதர்மேன் விளக்கம்
சென்னை: அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உருவாகும் புயல், தமிழகத்திற்கு எந்த மாதிரியான பாதிப்பை தரும். அடுத்த சில நாட்களுக்கு எங்கெல்லாம் மழை என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்று இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மழை தொடரும். அதிலும் வடதமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இது போன்ற எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு அடுத்த சில நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தொடரும்.

வங்கக் கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உருவாகும். இது நிச்சயம் புயலாக மாறும். ஆனால் தமிழகத்தில் கரையை கடக்காது. அது ஆந்திரா அல்லது ஒடிஸாவை நோக்கி செல்லும். எனவே அடுத்த புயல் வருவது குறித்த தகவல்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அது போல் மற்றொரு ட்வீட்டில் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு தொடர் மழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், போளூர், ஆற்காடு, ஆம்பூர்- திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இடியுடன் கூடிய மழை 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை விளாசும் என தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 24ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 24ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினத்தை பொறுத்தவரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications