நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி.. மேலே நடந்த சம்பவம்! 4 மாவட்ட திடீர் மழைக்கு.. இதுதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதேபோல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

What is the real reason behind heavy rain in southern districts of Tamil Nadu?

அங்கே கடந்த 10 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை என்ன?: அதில் இன்று காலை 8:30 மணி முதல் தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் மட்டும் 207 மி.மீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மைய ரெக்கார்ட் கூறுகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் 67 மிமீ மழை பெய்துள்ளது, தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை மேகங்கள் தொடர்ந்து நகரால் ஒரே இடத்தில் இருப்பதால் அங்கே உள்ள ரேடார் உறைந்துவிட்டதாக தெரிகிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ரேடார் இந்த இடங்களில் நிறைய மழையை கொட்டும் ஸ்டேஷனரி ரெயின் பேண்டுகளுக்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. வீட்டிற்குள் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள், என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு கூறியுள்ளது. கடுமையான மழை மேகங்கள் சிவப்பு தக்காளி போல.. இந்த பகுதிகளுக்கு மேலே இருப்பதால் கனமழை பெய்கிறது.

வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம். வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்கிறார்கள்

எச்சரிக்கை மேல் எச்சரிக்கை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொட்டும் கனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பழைய குற்றாலம் அருவியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அங்கே குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு: நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர் காரணமாக மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர் . வீட்டில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டு வருகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

விரையும் குழு: தென் தமிழ்நாட்டிற்கு விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படை. தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு குழு. அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+