99B-ஆக மாறிய பெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம்.. திடீரென இப்படி சொல்வது ஏன்? என்ன காரணம்?
சென்னை: பெங்கல் புயலை இந்திய வானிலை ஆய்வு மையம் 99B என்று குறிப்பிட தொடங்கி உள்ளது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
பெங்கல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. புயல் சின்னம் சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் உள்ளது. நகரும் வேகம் 13 கி.மீட்டரில் இருந்து 10 கி.மீட்டராக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 29, 30தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வேகம் குறைந்து 3 கிமீ வேகத்தில் நகர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. கடலூர் - சென்னை இடையே வரும் 30ம் தேதி கரையை பெங்கல் புயல் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புயல் நேற்று மாலை உருவாகி இருக்க வேண்டும். ஆனால் உருவாகவில்லை. இன்று இதுவரை உருவாகவில்லை. நாளை காலைக்குள் உருவாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது புயலாக மாறவில்லை என்பதால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு தற்போது குறியீடு வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பெங்கல் புயலை இந்திய வானிலை ஆய்வு மையம் 99B என்று குறிப்பிட தொடங்கி உள்ளது.
வானிலை ஆய்வு மையம்: தமிழ்நாட்டில் இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்த எச்சரிக்கையில், நான் முன்பே கொடுத்த வானிலை கணிப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. இன்று டெல்டா முதல் சென்னை வரை பகல்/இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்று அதிகம் வீசும். நன்றாக என்ஜாய் செய்யவும்.
29 முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ல் ஃபுல் எபெக்ட் காரணமாக மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications