அடுத்த 1 வாரத்திற்கு சென்னையில் ஆபீஸ் போறீங்களா? முதல்ல இதை படிங்க.. ரொம்ப சிக்கலாச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காலை, மாலை அலுவலகம் செல்வது பலருக்கும் சிக்கலாக இருக்கும் என்று வானிலை மைய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Why it is difficult to travel to office in morning and evenings amid the heavu raining weather?

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.

சென்னை சாலை பயணம்: அடுத்த 1 வாரத்திற்கு இதனால் சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இதனால் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றே சென்னையில் காலை நேரத்தில் பெய்த சாரல் மழை காரணமாக சாலையில் டிராபிக் அதிகமாக இருந்தது. இதனால் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து சென்றன. நேற்று மாலையும் மழை காரணமாக வாகனங்கள் சாலையில் மிக மெதுவாக நகர்ந்தன. பல இடங்களில் சாலைகளில் பிளாக் ஏற்பட்டு வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டது.

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலையில் இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் காலை, மாலை அலுவலகம் செல்வது பலருக்கும் சிக்கலாக இருக்கும் என்று வானிலை மைய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு டிராபிக் ஜாம் ஏற்படுவதாலும், கடினமான மழை பெய்வதாலும் காலை, மாலை மக்கள் வெளியே செல்வது சிக்கலாக இருக்கும். இதனால் அலுவலகம் செல்வதும் சிக்கலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வானிலை சொல்வது என்ன?: இன்று 21.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் 22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள், தேனி முதல் மதுரை வரையிலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+