Weather: அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா, 15 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு 13 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா, 12 செ.மீ; சோழிங்கநல்லுார் சத்தியபாமா பல்கலை, மணலி புதுநகர், சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழகம், திருக்கழுக்குன்றம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா, 11 செ.மீ மழை பெய்துள்ளது.

அதன்படி இன்று பகல் 1 மணி வரை நீலகிரி, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தென்மேற்கு வங்க்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் (டிசம்பர் 02) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதை தொடர்ந்து வடக்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது.
பின்னர் மீண்டும் வந்த பாதையிலேயே தெற்கு, தென்மேற்கு நோக்கி நேற்று நகர துவங்கியது. நேற்று பகல் நிலவரப்படி, புதுச்சேரி நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இன்று, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தருமபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications