Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தந்தையர் தினம்... கவிதை பாடி கொண்டாடும் தட்ஸ்தமிழ் வாசகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி நமது வாசகர்கள் கவிதைகளையும் குவித்து வருகின்றனர். ஒவ்வொரு கவிதையிலும் தந்தையை நினைத்து உருகி மருகியுள்ளனர் பலர். அதிலிருந்து சில..

Oneindia Tamil readers' poetry tributes to their fathers

பின்னதொருநாளில்..! - சுரேஷ் ஆறுமுகம் - சோழபாண்டியபுரம்

படித்து - முடித்து
வேலையில்லாமல்
சுற்றிகொண்டிருந்தபொழுது
அவர்
மட்டுமே சம்பாதித்த வேளையில்
ஒரு குண்டுமணி அளவு கூட
மரியாதை குறையவில்லை எனக்கு..!
பின்னதொருநாளில்,
நான் வேலைக்கு போக
அவர் ஓய்வெடுக்க (முன்பிருந்த என்னைப்போல் அல்ல..!)
என்னையும் அறியாமல்
அவரின் மதிப்பு குறைந்தது என்னிடம்..!
காரணம்
தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல்
எல்லாவற்றையும்
எனக்கென செலவழித்து
சுருக்கமாக சொன்னால்
தன்னை உருக்கி - என்னை உருவாக்கியிருந்தார்
ஆக,
அவர் கணக்கில்
நான் தான்
அவரின் பிரதான சொத்து
ஆனால், என் கணக்கில் அவர்....!
சொல்லித்தான்
தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை
அந்த
அவர் யாரென்று.....!
மறந்து போகத்தேவையில்லை
அந்த அவர்
நாமாக கூட இருக்கலாம்..,
மீண்டும் பின்னதொருநாளில்...!

--
காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில் - ஜெகன் பிரபு

உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்..

கருவறை
மட்டும்தான்
உனக்கில்லை
தாயென்று சொல்ல
உன்னை..

உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்..

துயரங்களால்
எம் விழி
நனைந்தால்
துடைப்பது
உன் விரல்களல்லவா..

சோதனையானாலும்
வேதனையானாலும்
தோள் கொடுக்கும்தோழன்
நீயல்லவா...

உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...

அனுதினமும்
போற்றப்படவேண்டும்
உன் புகழ்
பூவுலகம்
வாழும் காலம் வரை...!

--

என் அப்பாவுக்காக - மாலதி பால்சாமி

உங்களை என் அப்பா என்று
சொல்ல பெருமைப்படுகிறேன் ..!
உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்
சந்தோசத்திற்காக உங்கள் சந்தோசத்தை இழந்தவர் நீர்!
என்னைபற்றி முழுவதும் அறிந்த ஜீவன் !
எங்கள் வாழ்க்கை பிரகாசமாய் இருக்க
உங்களை மெழுகு போல் உருக்கிகொண்டவர் நீர்!
நீங்கள் படிப்பறிவு இல்லாதவர் தான் -இருந்தாலும்
நான் படிப்பது உங்களால் தான் !
நான் இங்கு சுகமாய் வாழ -நீங்கள்
அங்கு ரணமாய் வேலையில் !
எங்கும் எப்பொழுதும் நீங்கள் என்னிடம் வேண்டிசொல்வது
"நல்லா சாப்பிடு, உடம்ப பாத்துக்கோ."
இந்த இரு வார்த்தை போதும்
எனக்கு இந்த மண்ணில் வாழும் வரை !
நான் சோர்ந்து அல்லது தோல்வியில்
விழும் பொழுது எல்லாம்
உங்களை மட்டும் தான் நினைக்கிறேன்!
என்னுடைய முதல் எடுத்துக்காட்டு நீங்கள் தான் !
தனக்குள் வலி இருந்தும் அதை வெளிகாட்டாமல்
சிரிக்க எப்படி முடிகிறது உங்களால்
எனக்கும் கற்றுக் குடுங்கள் அப்பா !
அந்த வித்தையை!!
ஆசைகளை துறந்தவன் தான் மகான் எனில்
என் தந்தையும் ஒரு மகான் தான் !
நான் எவ்வளவோ ஆசைப்பட்டு கேட்டுஇருக்கிறேன்
உங்களிடம் -அத்தனையும் நிரைவேற்றுவீர் !
இப்பொழுது கேட்கிறேன் உங்கள் அன்பு மகள்
உங்கள் ஆசை என்ன அப்பா ????
நீங்கள் எனக்கு கற்று கொடுத்தவைகளில் தான்
வாழ்க்கை இருக்கிறது என்று எனக்கு புரிந்தது இத்தருணத்தில் ..!
சாப்பிடும் பொழுது கூட எனக்கு பிடிக்கும் என்ற
காரணத்தினால் சாப்பிடாமல் உட்கந்திருப்பபீர்..!
எல்லா ஆண்மகன்களுக்கும் உள்ள ஒரு
குணம் என் அப்பாவிடமும் உள்ளது ...
நிறைய அன்பு உள்ளத்தில் உள்ள போதிலும்
அதை எப்படி வெளிகட்டுவது என்று தெரியாமல் இருப்பது."
பரவாயில்லை ,நான் அறிவேன் உங்கள் மனதை !
என் முகம் மற்றும் கண்களை பார்த்து
எப்படி என் தேவைகளை தாங்கள் அறிவீரோ
அதே போல் நானும் அறிவேன் உங்கள்
உண்மையான அன்பை ..!
ஏனென்றால் நான் உங்கள் மகள்... அப்பா ..

நான் கேட்ட கதைகளுக்கு நீ தான் ஹீரோ - அபுதாபி வினோத் ராமலிங்கம்

தாயின் வயிற்றில் இருந்த நாட்களைவிட
உன் முதுகில் இருந்த நாட்கள் அதிகம்!!

நான் தடுமாறி நடந்த போதும்
கை பிடித்து நடந்தாய்!!
நான் தடம்மாறி நடந்த போதும்
கை கொடுத்து அணைத்தாய்!!

நீ கூறும் கதைகளுக்கு
நான் தான் ஹீரோ என்றாய்!!
ஆனால்
நான் கேட்ட கதைகளுக்கு
நீ தான் ஹீரோ!!

வளர்ந்த பின்பு
எப்படி பைக் ஓட்ட வேண்டும்!!
என் மீசை எப்படி இருக்க வேண்டும்!!
நான் எப்படி வேட்டி கட்ட வேண்டும்!!
அனைத்துக்கும் ரோல்மாடல் நீ தான்!!

உலகம் இப்படி தான் இருக்கும்'
உன் குரல் தான் முதலில் கூறியது!!
கோபம் இப்படி தான் இருக்கும்
உன் முகம் தான் முதலில் கூறியது!!

என் பாஸ்போர்ட், ஃபேஸ்புக் பெயர்களில்
உன் பெயர் என் பெயருக்கு பின்னால்!!
அதில்மட்டுமல்ல
நான் செய்யும் எல்லா விஷயத்துக்கு பின்னாலும்
உன் பெயர் தான் இருக்கிறது!!

இன்று என் மகனை என்னை போல்
பார்க்க நீ ஆசை படுகிறாய்!!
ஆனால் நான்
உன்னை போல் என்னை பார்க்க ஆசைப்படுகிறேன்...

உனக்கு வாழ்த்து சொல்ல
என் பெயர் சொன்னால் மட்டும் போதும்!!

--

வாசகர் ஆலன் எழுதி அனுப்பியுள்ள கவிதை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+