Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் சுயாட்சி உரிமையை சிதைக்கும் பாகிஸ்தான்.. ஐ.நா.வில் சீறிய இந்தியா

சுயாட்சி உரிமையை பாகிஸ்தான் சிதைத்து வருவதாக ஐ.நாவில் இந்திய பிரதிநிதி கடுமையாக குற்றம் சாட்டினார்.

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் சுயாட்சி முறையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது என்று ஐ.நா பொதுச் சபையில் இந்திய நிரந்தர பிரதிநிதி மயங்க் ஜோஷி கடுமையாக பேசினார்.

"பாகிஸ்தான் மக்களுக்கே இத்தனை கால அந்நாட்டு வரலாற்றில் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்இ அது தொடர்ந்து காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்ரமித்து வருகிறது. அப்பகுதி காஷ்மீரை ஒரு காலனியாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Pakistan destroy self-rule right: india flayed

ஆனால், தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் கொண்ட இப்பகுதி காஷ்மீரின் சுயாட்சி உரிமைகள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்து இதனை ஒரு திரையாகப் பயன்படுத்தி இந்திய மக்கள் மீது பயங்கரவாதத்தை தூண்டி விட்டு வருகிறது" என்று ஐநா பொதுச்சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

சுய நிர்ணய உரிமைக்கான பாகிஸ்தானின் 'சடங்கார்த்த பரப்புரையை' சுட்டிக்காட்டிய மயங்க் ஜோஷி, பாகிஸ்தான் தங்கள் நாட்டு மக்கள், தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து சரி செய்ய முயற்சி செய்வதை விடுத்து, அண்டை நாட்டின் பிராந்திய பிரச்சினைகளை சரி செய்வதற்காக பேசி வருவது பன்னாட்டு விதிமுறைகளை மீறுவதாகும் என்று மேலும் கடுமையாக சாடினார்.

"இப்போது சர்வதேச நாடுகளே பாகிஸ்தானின் தவறான முயற்சிகளை கவனித்திருப்பார்கள். எனவே நாங்கள் இதில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை" என்றார் மயங்க் ஜோஷி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+