Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் கண்ணாடியில் பாம்பு அசைந்த திகில் காட்சி! சேலத்தில் தம்பதியர் அதிர்ச்சி.. உயிர் பிழைத்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. காரில் தம்பதி இருவரும் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த பகீர் நிகழ்வு நடந்திருக்கிறது.. . குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே தம்பதி இருவரும் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். என்ன நடந்தது நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில்?

கோடை காலங்களில் வறட்சி காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்துவிடுவது வழக்கமாகிவிடும்.. இதில் பாம்புகளை பொறுத்தவரையில், குளிர் மற்றும் மழை காலங்களில் வெப்பம் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடும்.. சந்து பொந்துகள், இடுக்குகள் போன்ற இடங்களில் உஷ்ணத்துக்காக தஞ்சமடையும்.

Salem Car Mirror Snake

சேலத்தில் பாம்பு

அந்தவகையில், தற்போது தமிழ்நாட்டின் குளிர்காலம் துவங்கியிருக்கும் நிலையில், பாம்புகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பாம்புகள் தொல்லை பெருகி கொண்டிருக்கிறதாம்.. 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்து கொண்டது. இதை தீயணைப்பு வீரர்கள் போராடி, பத்திரமாக மீட்டனர்.

அதேபோல திருப்பூர் மாவட்டம் உடுமலையிலும் ஒரு சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.. கோபால்சாமி என்பவர் பைக்கில் வந்துகொண்டிருநத்போது, ஸ்பீடோமீட்டரில் இருந்து பாம்பின் வால் பகுதி மட்டும் வெளியே தெரிந்துள்ளது.. இதைப்பார்த்து அலறிப்போன கோபால்சாமி, உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தார்.

ஆனால் பைக்கில் பெட்ரோல் டேங்க்கின் அடிப்பகுதிக்குள் பாம்பு பதுங்கிவிட்டதால் அதை எளிதில் வெளியே எடுக்க முடியவில்லை. பிறகு பைக் மெக்கானிக்கை வரவழைத்து, பைக்கில் உள்ள பாகங்களை எல்லாம் பிரித்து எடுத்தபிறகுதான் பாம்பை பிடிக்க முடிந்தது.. பிடிபட்ட பாம்பு 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்ததாம்.

கார் கண்ணாடியில் பாம்பு

இப்போதுகூட மீண்டும் ஒருஅதிர்ச்சி சம்பவம் நாமக்கல்-சேலம் சாலையில் நடந்துள்ளது.. கணவன்-மனைவி 2 பேரும் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.. அப்போது புதுச்சத்திரம் அருகே சென்றபோது, திடீரென கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த சிறிய பாம்பு, காரின் பக்கவாட்டு கண்ணாடியில் இருந்து குபீரென வெளியே வந்துள்ளது..

கார் கண்ணாடியில் பாம்பை பார்த்ததுமே தம்பதி இருவருமே அதிர்ச்சியடைந்த காரை நிறுத்திவிட்டார்கள்.. அந்த வழியாக சென்றவர்கள் வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றனர்.

காருக்குள் கொம்பேறி மூக்கன்

பிறகு இதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பதறிப்போய் விட்டனர்..

அந்த வீடியோவில், கார் கண்ணாடிக்குள் புகுந்துவிட்ட பாம்பு, கண்ணாடி வழியாக வெளியேற முயற்சிக்கிறது.. இதற்காக நெளிந்து வளைந்தபடியே காணப்படுகிறது.. பாம்பு எப்போது வேண்டுமானாலும் காருக்குள் விழுந்துவிடும் என்ற பீதியில் தம்பதி இருவரும் அச்சத்தில் பேசுவதை அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.

ஒரு நிமிட எச்சரிக்கை

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை தம்பதியினர் பதிவிட்டுள்ளனர்.

"அதிகாரிகளும் வனவிலங்கு நிபுணர்களும், டிரைவர்களும் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்திய பிறகோ அல்லது தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் நிறுத்திய பிறகோ , புறப்படுவதற்கு முன்பு தங்கள் வாகனங்களை கவனமாகச் சரி பார்த்து கொள்ளுங்கள். விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். ஒரு சில நிமிட எச்சரிக்கையானது, மிகப்பெரிய பயத்தையோ அல்லது விபத்தையோ தடுக்கும்" என்று பதிவிட்டுள்ளனர்.

இதற்கு ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. காரை உடனே நிறுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் அந்த பாம்பு, பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் மீது விழுந்திருந்தால் இன்னும் பெரிய ஆபத்தாக போயிருக்கும் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+