15 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: திமுக - காங்கிரஸ் கட்சியில் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில் வரும் 15 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் நடுவே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் நேற்று நிறைவேறியது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் வழங்கிய திமுக, இம்முறை அதை 41 என குறைத்து வழங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து நாளை மீண்டும் திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
2 அல்லது 3 நாட்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும். அதன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலோடு ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications