Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி 'தமிழ்' - விஞ்ஞானிகள் ஆடியோவால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லையில் விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் டைசென்ஜான் என்கிற சிகரம்தான் இப்போது டாக்கிங் பிலேஸ். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19ம் தேதி மதியம் 1.30 மணிக்கு இரண்டு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்குத் தெரியாது தாங்கள் அற்புதமான ஒன்றை இங்கு கண்டுபிடிக்கப் போகிறோம் என்று.

Mummy Man spoke Tamil

சுற்றுலாவிற்காக சென்ற அவர்கள் முன் வரலாற்று பொக்கிஷம் ஒன்று கிடைத்தது. அதுதான் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். அந்த உடல் 90 சதவிகிதம் பழுதடையாமல் அப்படியே இருந்தது என்பதோடு, அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் அந்த மனிதன் மரணமடைந்ததால் பனி அவரை பாதுகாத்து உலக வரலாற்று ஆய்வுக்காக நமக்கு அளித்திருக்கிறது.

பனிப்படலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி மனிதனுக்கு 'ஊட்சி' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது வரை அறிவியலின் ஆற்றலால் கண்டுபிடித்துள்ளனர்.

இன்னும் என்னென்ன அவர் உடம்பில் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் புட்டு புட்டு வைக்கின்றனர். அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்திருக்கிறார். அவருடைய உடலில் உள்ள எலும்புகளில் கோளாறுகள் இருந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பு முதுகில் குத்தி இறந்ததையும், அப்போது அவருக்கு 45 வயது என்றும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஊட்சி இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பெரும் மனவேதனையுடன் இருந்ததை அவரது விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப் போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.

இதையெல்லாம் கண்டு பிடித்ததைவிட விஞ்ஞானிகள் பெரும் சிரமம் மேற்கொண்டு, தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு இந்த மம்மி மனிதனின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆய்வை செய்துள்ளனர். இறுதியாக அவரது குரல் தடத்தையும் உருவாக்கிவிட்டனர்.

ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினையும் உருவாக்கி விஞ்ஞான உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

5300 ஆண்டுகளுக்கு முன் பேசிய ஊட்சி என்று அழைக்கப்படுகிற மம்மி மனிதன் தமிழ் பேசியிருப்பானா? உச்சரிப்பை கவனியுங்கள்.

"ஆ, இ, ஈ, உ, ஊ" ஆகிய தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் ஒலியை ஊட்சி உச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி அதனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நீங்களும் ஆடியோவை கேட்டால் தெரியும் 5300 ஆண்டுகளுக்கு முன் மம்மி மனிதன் பேசியது தமிழ்தான் என்று.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+