பாமக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியானது: அன்புமணி, ஜி.கே.மணி தொகுதிகள் சஸ்பென்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 72 பேர் கொண்ட இரண்டாம் பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டது.

இந்த வேட்பாளர் பட்டியலிலும் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை.

PMK 2 candidate list release for 72 constituencies

சட்டசபைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே சந்திக்கிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறது. 234 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 45 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை வெளியானது. இன்று 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

PMK 2 candidate list release for 72 constituencies

இதுவரை 117 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

72 வேட்பாளர்கள் பட்டியல் விபரம் :

15ம் தேதி தேர்தல் அறிக்கை

PMK 2 candidate list release for 72 constituencies

இதனிடையே பாமகவில் தேர்தல் அறிக்கை வரும் 15ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அளிக்கையில், "கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி பல்வேறு தரப்பினருடன் தனித்தனியாக கலந்தாய்வு நடத்தி, அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சாத்தியமான கருத்துக்களை வரைவு தேர்தல் அறிக்கையில் சேர்த்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கான தீர்வுகள், செயல்திட்டங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை (15.04.2016) காலை 11.00 மணிக்கு சென்னையில் வெளியிடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

PMK 2 candidate list release for 72 constituencies

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார்" என்று ஜி.கே.மணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+