தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.. ரஜினி நேரடி அரசியல் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். முதல்நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், கடைசி நாளான இன்றும் ரசிகர்களிடம் பேசினார்.

இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்கர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை.

நிர்வாக சீர்கேடு

நிர்வாக சீர்கேடு

தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்.

எல்லாம் நன்மைக்கே

எல்லாம் நன்மைக்கே

நம்மை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். அவதூறு எல்லாம் உரம்தான். அதை நம்முடைய வளர்ச்சிக்கானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதான் நாம வளரமுடியும். ஒரு செடி வளர நிறைய செய்ய வேண்டும் அதுபோலதான் அரசியலும்.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

அரசியலில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். மு.க ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நிர்வாகி. பாமக அன்புமணி நல்ல மனிதர். திருமாவளவன் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சீமான் சிறந்த போராளி.

சிஸ்டத்தை மாற்றுவோம்

சிஸ்டத்தை மாற்றுவோம்

தமிழகத்தில் சிஸ்டத்தை மாற்றனும். சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்று பேசி ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth has said that the whole system has to be changed in Tamil Nadu.
Please Wait while comments are loading...