பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெ.வை எதிர்க்கும் ஆகினேஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து பாமக சார்பில் முனைவர் ஆகினேஸ் போட்டியிடுவார் என்றும் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கோபால் போட்டியிடுவார் என்றும் பாமக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி பட்டியலை தி.நகரில் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். ஏற்கனவே 229 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாமக அறிவித்திருந்தது.

உடுமலைப் பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுவதால் ஏற்கனவே அறிவித்திருந்த வேட்பாளரை மாற்றி விட்டு வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் 5 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக இறுதி வேட்பாளர் பட்டியல்:
பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:
ஆர்.கே.நகர்- முனைவர் ஆகினேஸ்
கொளத்தூர்-கோபால்
துறைமுகம்-சுரேஷ்குமார்
ஆவடி-அனந்த கிருஷ்ணன்
சிவகாசி-சிவநாதபாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications