"பெரியம்மா"வுக்காக 'தியாகச் செம்மலாக' வாழ்ந்த "சின்னம்மா"... பொன்னையன் பொளேர்
'பெரியம்மா' ஜெயலலிதாவின் உடல்நிலையை 'தியாகச் செம்மலாக' கண்காணித்து வந்தார் சின்னம்மா என சசிகலாவுக்கு பொன்னையன் புகழாரம் சூட்டியுள்ளார். சசிகலாவே அதிமுக பொதுச்செயலர் எனவும் பொன்னையன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது:

'பெரியம்மா'வின் ஜெயலலிதாவின் மனசாட்சியாக திகழ்ந்தவர் 'சின்னம்மா' சசிகலா. ஜெயலலிதாவின் புகழுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா.
சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவது உறுதி. அதிமுக பொதுக்குழு, செயற்குழு விரைவில் கூட இருக்கிறது.
பெரியம்மா ஜெயலலிதாவின் உடல்நிலை காப்பதில் 'தியாகச் செம்மலா'க திகழ்ந்தவர் 'சின்னம்மா' சசிகலா.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.












Click it and Unblock the Notifications