'இந்தியா டுடே' தமிழ் பதிப்பு நிறுத்தியது கூட தெரியலையே சசிகலாவுக்கு... அதிமுக தொண்டர்கள் 'ஷாக்'

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் தப்பு தப்பாக பேசியிருக்கிறார் சசிகலா. இந்தியா டுடே தமிழ் பதிப்பு நிறுத்தியாமல் அந்த பத்திரிகை வந்து கொண்டிருப்பதாக பேட்டி தந்துள்ளார் சசிகலா.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எனும் மிகப் பெரும் பேரியக்கத்தின் பொதுச்செயலராக தம்மை தேர்வு செய்ய வைத்த சசிகலா அதற்கு தாம் சிறிதும் தகுதியானவரே இல்லை என்பதை அவரே வெளிப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா டுடேவின் தென்னக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு சசிகலாவும் வரவழைக்கப்பட்டார். அவர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்து வழக்கம்போல இரண்டு சொட்டு கண்ணீரை விடுவதை போல துடைத்துக் கொண்டார்.

Sasikala's first TV interview to India Today

இந்த நிகழ்ச்சியை லைவ் செய்தது இந்தியா டுடே. அப்போது இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் ராகுல் கன்வால், சசிகலாவிடம் நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டார்.

சசிகலாவிடம் ஊடகங்கள் கேட்ட முதல் கேள்வி இதுதான். இதற்கு சசிகலா அளித்த பதில் அப்படியே....

இந்தியா டுடே கான்கிலேவ் வந்து முதல் முறையாக இங்க தமிழ்நாட்டுல செஞ்சிருக்கீங்க

Sasikala's first TV interview to India Today

பிராந்திய மொழிகளில் வந்து இண்டியா டுடே எடுத்துகிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும்........ வாசகர்களை அந்தந்த ... இப்ப தமிழ்நாடு என்றால் தமிழ்நாட்டு மொழியிலேயே உங்களுடைய பத்திரிகை வருவது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது,.

ஜெயலலிதா இந்த முறை இங்கே இருந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பார். இந்தியா டுடே பத்திரிகை மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு.

இவ்வாறு சசிகலா கூறினார்.

இந்தியா டுடே தமிழ் பதிப்பு நின்றுபோய் 2 ஆண்டுகளாகிவிட்டன. இந்த விவரமே தெரியாமல் இந்தியா டுடே பத்திரிகை தமிழில் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி என்று சசிகலா பேசியிருப்பது அதிமுக தொண்டர்களை பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+