For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன எஞ்சி இருக்கிறது? என்ன விஞ்சி இருக்கிறது? தமிழ்ச் சமுதாயம் சீரழிந்ததே மிச்சம்.. திருமா

Google Oneindia Tamil News

விழுப்புரம்: திமுகவும், அதிமுகவும் இத்தனை காலம் தமிழகத்தை ஆண்டு விட்டன. என்ன விஞ்சி இருக்கிறது, என்ன எஞ்சி இருக்கிறது, தமிழ்ச் சமுதாயத்தை இவர்கள் சீரழித்ததுதான் மிச்சம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திண்டிவனம், வானூர் மற்றும் மயிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் வாக்கு சேகரித்துப் பிரச்சாரம் செய்து பேசினார்.

திருமாவளவனின் பிரச்சாரத்திலிருந்து...

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சவாலான முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி முறை தத்துவத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதன் பின்னரே, மக்கள் நலக் கூட்டணி உருவானது. பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்தலாம் என்று நாங்கள் கூறுகிறோம்.

முடிவு கட்டுவோம்

முடிவு கட்டுவோம்

ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி ஆகியோர் தன்னை முதல்வராக்குங்கள் என்கிறார்கள். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அப்படிச் சொல்லவில்லை. ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி, கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவோம் என்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் என்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனால், இப்போது திமுக கூட்டணியில் உள்ள அவரால், அவ்வாறு கூற முடியுமா?

விஜயகாந்த் மட்டும்தான்

விஜயகாந்த் மட்டும்தான்

ஊழலை ஒழிப்பதாக இருந்தாலும், மதுவை ஒழிப்பதாக இருந்தாலும் அதை செய்கிற ஆற்றல் ஒரு கட்சி ஆட்சியால் முடியாது. கூட்டனி ஆட்சியால் தான் முடியும். அதனால் தான் அதை நான் முன்மொழிந்தேன். இந்த கருத்தை ஒத்துக்கொண்டு உடன்பட்டவர், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிலே முதன் முதலில் விஜயகாந்த் ஒருவர் தான்

சீரழித்து விட்டார்கள்

சீரழித்து விட்டார்கள்

இந்தத் தேர்தல் முற்றிலும் மாறுபட்டது, வேறுபட்டது. திமுகவும், அதிமுகவும் ஆட்சி செய்துவிட்டன. என்ன எஞ்சி இருக்கிறது? என்ன விஞ்சி இருக்கிறது? தமிழ்ச் சமுதாயத்தை சீரழித்ததுதான் மிச்சம். ஊழல், மது கலாச்சாரம்தான் மிஞ்சி இருக்கிறது. மதுவால் ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் என்கிறார்கள். இது பெருமைக்குரியதா? திமுகவும், அதிமுகவும் போலி வாக்குறுதி அளித்துள்ளன. இதனால்தான் தமிழகத்தில் மாற்று அரசியலை முன் வைத்துள்ளோம்.

அப்பட்டமான பொய்

அப்பட்டமான பொய்

திமுகவும், அதிமுகவும் மதுவை ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். அது அப்பட்டமான பொய் வாக்குறுதி, போலி வாக்குறுதி. 5 முறை கருணாநிதி முதல்வராக இருந்திருக்கிறார். 3 முறை ஜெயலலிதா முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் மதுவிலக்கை பற்றி எண்ணிப் பார்க்காதவர்கள், தற்போது மதுக்கடைகளை மூடுவோம் என்கிறார்கள்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

தமிழ்நாடு முழுவதும் குடிகாரர்களை உருவாக்கிய பிறகு, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், தமிழ் சமூகமே அழிந்து கொண்டிருக்கிற நேரத்தில் மதுக்கடைகளை மூடுவோம் என்கிறார் கருணாநிதி. மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்கிறு சொல்கிறார் ஜெயலலிதா.

சாராய சப்ளை யாரிடமிருந்து?

சாராய சப்ளை யாரிடமிருந்து?

எப்படி உங்களால் மதுக்கடைகளை மூட முடியும், தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எல்லாம் சாராயம் சப்ளை செய்வது யார்? அம்மா முதலாளியாக இருக்கின்ற சாராய ஆலைகளில் இருந்து தான் 70 சதவிகிதம் சாராயக்கடைகளுக்கு சாராயம் வினியோகம் செய்யப்படுகிறது.

அம்மா சாராயம்

அம்மா சாராயம்

சாராயக் கடைகளை... அம்மா சாராயம். டாஸ்மாக் கடைகளில் இருக்கின்ற சாராயத்திற்கு நீங்கள் தான் இந்த பெயரை வைத்து இருக்கிறீர்கள் உங்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் என்று கூறினார் திருமாவளவன்.

English summary
VCK leader Thirumavalavan has blasted both DMK and ADMK for their misdeeds to the people of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X