For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது வி.சி.- ரவிக்குமார் போட்டியில்லை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான 12 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலரான எழுத்தாளர் ரவிக்குமார் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 18-ந் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டார்.

VCK announces Final Candidates List

அதில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் நேற்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவியும் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று எஞ்சிய 12 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர்- பாலசிங்கம்

வானூர்- தமிழ்ச்செல்வன்

அரக்கோணம்- இளஞ்சேகுவேரா

திருவிடைமருதூர்- விவேகானந்தன்

பொன்னேரி- செந்தில்

ஸ்ரீபெரும்புதூர்- வீரக்குமார்

கள்ளக்குறிச்சி- ராமமூர்த்தி

அரூர்- கோவேந்தன்

சோழவந்தான் - பாண்டியம்மாள்

பரமக்குடி- இருளன்

ஆத்தூர்- ஆதித்யன்

மானாமதுரை- பாலன்

ரவிக்குமார் போட்டியில்லை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் எழுத்தாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. 2006-2011 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.

இம்முறை காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். மேலும் காட்டுமன்னார்கோவில் தொகுதியைத் தவிர வேறு தொகுதியில் போட்டியிடவும் ரவிக்குமார் விரும்பவில்லை என்கின்றன விடுதலை சிறுத்தைகள் வட்டாரங்கள்.

English summary
VCK leader Thol. Thirumavalavan has announced final candidate list on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X