அந்த ஒரு நொடி.. சிலிர்க்குதே.. தொப்பூர் கணவாயை உலுக்கிய அந்த விபத்து எப்படி நடந்தது? உண்மையான காரணம்
தருமபுரி: கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது. இந்த வீடியோவின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

கொடூர விபத்து: இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மீண்டும் விபத்து: இந்த நிலையில் நேற்று மாலை அங்கு மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும் நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது 56) க/பெ. கார்வின் த.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல், . ஜெனிபர் (வயது 29) க/பெ. வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தின்படி இரண்டு லேன்களில்.. ஒரு லேனில் ஒரு லாரி, அதன்பின் ஒரு கார் சென்று உள்ளது. இன்னொரு லேனில் ஒரு கார், அதன்பின் இரண்டு லாரி வந்துள்ளது. இதில் இரண்டாவதாக வந்த லாரிதான் விபத்திற்கு காரணம்.
அதிக சுமை ஏற்றி வந்த அந்த லாரி பிரேக் பிடிக்க முடியாமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற லாரியில் மோதியது. அந்த லாரி அதற்கு இடதுபக்கம் சென்ற லாரியில் மோதி, அதோடு முன்னால் சென்ற காரிலும் மோதியது.
இதில் மொத்தமாக அந்த லாரி மற்றும் கார் தண்ணீருக்குள் விழுந்தது. பாலத்தை உடைத்துக் கொண்டு தண்ணீரில் விழுந்துள்ளது. இப்படித்தான் மொத்த விபத்தும் ஏற்பட்டு உள்ளது. அந்த லாரி அதிக சுமை ஏற்றி வந்து பிரேக் பெயிலியர் ஆனதே விபத்திற்கு காரணம்.
#Horrible_Accident தர்மபுரி தொப்பூர் அருகே இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்து... மூன்று பேர் பலி!#accident #Video #dharmapuri #Fire pic.twitter.com/LhBflGGdmk
— Se.Balajee (@Se_Balajee) January 24, 2024
எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.
தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 12 ஆண்டில் 1010 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications