இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள்!
சென்னை: பிரிட்டிஷ் பேரரசின் பிடியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெறுவதற்காக வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள் இன்று. ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தமிழ் ட்வீட்: வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
வீரமங்கை இராணி வேலுநாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் கி.பி. 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார். வேலுநாச்சியார் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார். வாள் வீச்சு, களரி வீச்சு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகளையும் அவர் பெற்றார்.

இராணி வேலு நாச்சியார் கி.பி. 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவரை மணமுடித்தார். கி.பி.1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பிரிட்டிஷ் ராணுவதளபதி பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் அவரது வீரர்களுடன் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் வீரமரணம் அடைந்து விட்டார். வேலுநாச்சியார், முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல் அருகே விருப்பாட்சி விரைந்தார்.
தண்டவராயன் பிள்ளை உடன் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி பாளையத்தில் கோபால் நாயக்கரிடம் அடைக்கலமானார். பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். இராணி வேலு நாச்சியார், தளபதிகள் மருது சகோதரர்களுடன் இணைந்து புதிய படையணியை கட்டி எழுப்பினார்.
மைசூரை ஆண்ட ஹைதர் அலி உதவியுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறிது காலம் வேலுநாச்சியார் தங்கி இருந்தார். வேலுநாச்சியார் படையணியை கட்டமைக்க ஹைதர் அலி, கோபால் நாயக்கர் உள்ளிட்ட பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதனால் வேலுநாச்சியார் 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.

வேலுநாச்சியாரின் படை தளபதிகளில் ஒருவரான குயிலி, பிரிட்டிஷ் படைகளின் வெடிமருந்து கிடங்கை தற்கொலை படை தாக்குதல் மூலம் சிதறடித்தார். உலகின் முதலாவது தற்கொலைப் படை போராளி என்ற சரித்திரத்தைப் படைத்தார் தளபதி குயிலி. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டு ஆட்சிபுரிந்த போது சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ராணி வேலு நாச்சியார் தனது கணவரைத் தொடர்ந்து கி.பி.1789 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் ராணி வேலு நாச்சியார் மரணம் அடைந்தார்.
வட இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், சுதந்திரப் போராட்டத்தின் முதல் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்திய வரலாற்றுப் பெருமைக்குரியவர் நமது ராணி வேலுநாச்சியார்- பெருமிதம் கொள்வோம்... பெருமைகளைப் போற்றுவோம்!
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications