மழை வேண்டி தஞ்சை கோவில்களில் பூஜை
தஞ்சாவூர்:
வட கிழக்கு மழை தாமதமாவதால், மழை பெய்ய வேண்டி, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டனம் மாவட்டங்களைச் சேர்ந்த காவிரி பாசனப்பகுதி விவசாயிகள்,மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள்செய்தனர்.
தற்போது காவிரிப் பாசனப் பகுதிகளில் அறுவடை நிலையில் உள்ள சம்பா, தாளடிபயிர்களைக் காக்க வேண்டுமானால், தாமதமில்லாது மழை பெய்ய வேண்டும்.ஆனால் வழக்கமாக இன்னேரம் வந்திருக்க வேண்டிய வட கிழக்கு பருவ மழைதாமதமாகியுள்ளது. மொத்தம் 10 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் தண்ணீரின்றி வாடிக்கொண்டுள்ளன.
இதையடுத்து காவிரிப் பாசனப் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்புப் பூஜைகள்செய்யப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்புப் பூஜை செய்யப்ட்டது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்புதிருப்திகரமாகவே உள்ளது. இருந்தாலும் கூட இப்போதைய நிலையில், அந்தத்தண்ணீர் போதாது. மழை வந்தால் மட்டுமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
தற்போது உரிய நேரத்தில் மழை வராவிட்டால், பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம்உள்ளது. மேலும் உற்பத்தியும் பாதிக்கப்படும் என்றனர்.
மதுரையிலும் பிரச்சினை:
இதற்கிடையே, மதுரை மாவட்டம் பெரியார் மற்றும் வைகை அணைப் பாசனப்பகுதிகளில் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால், 15,000 ஹெக்டேர் பாசனநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தங்கவேலு மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருஅணைகளிலும் தற்போது 3136 மெட்ரிக் அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால்கடந்த ஆண்டு இதே நாளில் 5250 மெட்ரிக் அடி தண்ணீர் இருப்பு இருந்தது.
அக்டோபர் மாதம் வரை சராசரியாக 673மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்தது. இதுகடந்த ஆண்டு 827.1 மில்லிமீட்டராக இருந்தது. வட கிழக்குப் பருவ மழைபொய்த்ததத், இந்த நிலை என்றார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications