கறவை மாடு-கோழி: இது ராமதாஸின் 'பட்ஜெட்'
சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு கறவை மாடு, 5 நாட்டுக் கோழிகள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமக சார்பில் வேளாண்மை துறை வரைவு பட்ஜெட்டை ராமதாஸ் இன்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக அரசு பட்ஜெட் தயாரிப்பதற்கு முன் வணிக பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால், 60 சதவீத மக்கள் சார்ந்திருக்கின்ற விவசாயத்தை பற்றி அக்கறை கொள்ளவில்லை. விவசாயிகளின் தேவைகளை தெரிந்து கொள்வதற்கும் முயற்சி எடுக்கவில்லை.
வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 2வது ஆண்டாக இன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில், 128 தலைப்புகளில் எங்கள் ஆலோசனைகளை தெரிவித்துள்ளோம்.
வேளாண்மை மற்றும் கால்நடை அபிவிருத்திக்கு ரூ.5,760 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு கறவை மாடு, 5 நாட்டுக் கோழிகள் வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக உயர்த்த வேண்டும். அரசு மானியமாக ரூ.13 வழங்க வேண்டும்.
பொதுமக்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பாலுடன், கீரை வழங்கும் புதிய திட்டத்தை தெரிவித்துள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மானவாரி பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விளை பொருட்களை விற்பதற்கும், பதப்படுத்துவதற்கும் சர்வதேச தரத்துடன் மொத்த வியாபார சந்தைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் 2 நியமன உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
சிறப்பு வேளாண்மை பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேளாண்மை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications