Analyst பிரிவில் வேலை.. அழைக்கும் எச்சிஎல்.. சென்னை உள்பட 5 இடங்களில் பணி நியமனம்!

  • சென்னை: சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 5 இடங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எச்சிஎல் ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 0-3 ஆண்டு வரை அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான தகுதி விவரங்கள் வருமாறு:

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Analyst (Support & Operations) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    தேர்வாகும் நபர்கள் Analyst - Generative AI என்ற பணியில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    1 லட்சம் சம்பளம்.. சென்னை ஏர்போர்டில் வேலை.. ஒருவருக்கு விரித்த வலையில் குடும்பமே ஏமாந்தது எப்படி?

    அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட பிரிவில் 0-3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அதோடு இன்ஜினியரிங் முடி்து AI/ML புராஜெக்ட்டில் பைத்தான் உதவியும் செய்திருக்க வேண்டும்.

    மேலும் கிளவுட் ஏஐ பிளாட்பார்மில் Langgraph, Langchain, Python உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஏஐ ஏஜென்ட் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் மாடல் டிரெய்னிங், எவலுவேஷன் மற்றும் டெப்லாய்மென்ட் உள்ளிட்டவற்றுக்கான டேட்டா கலெக்சன், ஃப்ரி புராசசிங் தெரிந்திருக்க வேண்டும்.

    Advertisement

    Generative AI மற்றும் AI/ML டெக்னாலஜிஸ் உள்ளிட்டற்றில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு இரண்டையும் இணைத்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். பிற டீம்களுடன் சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக Generative AI Use Cases-யில் பைத்தான் அறிவு இருக்க வேண்டும். பைத்தான் புரோகிராமிங் லேங்குவேஜில் நிபுணத்துவம் கொண்டிருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

    யார் இந்த Finance With ஹரீஷ்? மாத சம்பள ஐடி வேலை முதல் ECR பங்களா வரை! அதிர்ச்சி மரண பின்னணி!
    Advertisement

    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பம் தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

    பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி பெங்களூர், சென்னை, ஹைதராபாத், நொய்டா மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs: HCL recruitment for Analyst (Support and Operations) roles. 0-3 years experience candidates can apply for this roles. Selected candidates will be appointed in 5 locations including Chennai and Bangalore.