Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை வசூலில் பந்தயம் அடிச்ச டாஸ்மாக்.. அடேங்கப்பா.. இத்தனை கோடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை வசூலில் டாஸ்மாக், அடித்து நொறுக்கியுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனையில், அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் 2 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.441.38 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பெற்ற பிறகு 717 கடைகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி அளவுக்கும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

TASMAC Records 441 38 Crore in Liquor Sales During Diwali Festival

தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை அளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. அதுவும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை புதிய உச்சத்தை எட்டும்.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டிய நாட்களில், டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை களைகட்டும். தமிழ்நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபான விற்பனை களைகட்டியது.

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை சுமார் ரூ.234 கோடியே 75 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையான நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் ரூ.206 கோடியே 63 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.441 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

மண்டல வாரியாக மதுவிற்பனை குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் சென்னை மற்றும் தூங்கா நகரமான மதுரை ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடம் பிடித்து வந்தன. இந்த முறை திருச்சி மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

திருச்சியில் ரூ. 98.97 கோடி, சென்னையில் ரூ. 95.85 கோடி, சேலத்தில் ரூ. 87.52 கோடி, மதுரையில் ரூ. 88.38 கோடி, கோவையில் ரூ. 70.66 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ. 98.97 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளிக்கு மறுநாளான இன்றும் (திங்கட்கிழமை) விடுமுறை என்பதால் மது விற்பனை இன்றும் ரூ.200 கோடியை நெருங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக பார்த்தால் மூன்று நாட்களில் ரூ.600 கோடியை நிச்சயம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பண்டிகை நாட்கள் என்றாலே திரைப்படங்களின் வசூல் குறித்த பேச்சு எழும். டாஸ்மாக் விற்பனையும் ஒவ்வொரு ஆண்டும் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி 2 நாட்களில் ரூ.441 கோடியைத் தாண்டியுள்ள டாஸ்மாக் வசூல், தீபாவளிக்கு வெளியான பெரிய திரைப்படங்களின் வசூலை அடித்து நொறுக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+